Karungali Soolam, Karungali Trishul, Karungali Trishool, Karungali Thirisoolam, கருங்காலி சூலம்.
கருங்காலி மரம் பயன்கள்:
கருங்காலி மரம் அதீத பிரபஞ்ச சக்தியை ஆகர்ஷணம் செய்து தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. பிரபஞ்சத்தில் உள்ள நல்ல சத்திகளை தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்தும், அதே நேரத்தில் கெட்ட சக்திகளை தங்கவிடாது என்பது தான் இதனுள் பொதிந்துள்ள சூட்சமம். கருங்காலி மரத்தின் நன்கு முற்றிய பகுதியை வேல், சூலம், மாலை, அல்லது பிரேஸ்லெட் போன்று செய்து அணிந்து பயன்படுத்துவதால் எடுத்த காரியம் சித்தி பெற்று, தொழில் வளர்ச்சி அடையும், பண தட்டுப்பாடு நீங்கும், மன அமைதி ஏற்படும், பல நாட்களாக இருந்து வரும் குலதெய்வ வழிபாட்டு தடைகளை நீக்கும், மனச்சோர்வை நீக்கும், உடலில் உள்ள சோம்பலை நீக்கி சுறு சுறுப்பை உண்டாகும், பதட்டம் மற்றும் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும், பேச்சுதிறமை அதிகரிக்கும் வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும். நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது. செவ்வாய் பகவான் கொடுக்கும் அனைத்து பலன்களும் கருங்காலி பொருட்கள் உபயோகிப்பதன் மூலம் கிடைக்கும்.
சூலம் வழிபாட்டின் மகத்துவம்:
திரிசூல வழிபாடு உயிர்களைப் பற்றியுள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை நீக்கி ஞானத்தை வழங்கி மோட்சத்தை அருள்கிறது. திரிசூல வழிபாடு இல்லறத்தாருக்குப் பாதுகாப்பையும், செல்வத்தையும், மனநிம்மதியையும், ஆரோக்கியத்தையும் அருள்கின்றது. எதிரிகளின் தொல்லைகளை நீக்கி, காரிய தடைகளை உடைத்து, பகைவர்களை வென்று சுகமாக வாழவும், ஞானத்தினைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ திரிசூல வழிபாடு உதவும்.
சூலம் வழிபாட்டினை வீட்டில்/ தொழில் செய்யும் இடங்களில் செய்யலாமா?:
சூலத்தை நாம் வீட்டில்/தொழில் செய்யும் இடங்களில் தாராளமாக வைத்து பூஜித்து வழிபடலாம். விக்கிரகங்களை வைத்து வழிபடுவது போன்ற நியதி எல்லாம் சூலம் வழிபாட்டிற்கு கிடையாது. எனவே அச்சம் இன்றி பூஜை அறையில் சூலத்தை வைத்து வணங்கி வரலாம். ஒரு அடி, அரை அடி, மற்றும் அதற்கும் சிறிய அளவில் கூட வாங்கி வைத்து பூஜிக்கலாம். இந்த சூலம் ஐம்பொன்னாலோ, வெள்ளி, பித்தளை, செம்பு ஆகிய உலோகத்தாலோ அல்லது கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டதாகவோ இருக்கலாம்.
கருங்காலி சூலம் வழிபாடு செய்யும் முறை:
கருங்காலி சூலத்தை முதலில் பாலில் ஒருமுறை கழுவி சுத்தம் செய்து விட்டு பின்னர் சுத்தமான நீரில் கழுவிவிட்டு நன்கு காய்ந்த பின்னர், ஒரு தூய்மையான துணி கொண்டு துடைத்து விட்டு, ஒரு நல்ல நேரத்தில் பூஜை அறையில் ஒரு பித்தளை அல்லது செம்பு தாம்பாளத்தில் குங்குமம், நாட்டு மாட்டு திருநீறு அல்லது பச்சரிசியை குமித்து வைத்து கருங்காலி சூலத்தை அதில் ஊன்றி வைக்க வேண்டும். பித்தளை அல்லது செம்பு தாம்பாளம் இல்லை என்றால் வெள்ளை அல்லது மஞ்சள் நிற துணியில் வைக்கலாம், வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து காயவைத்து அதில் கூட குங்குமம், நாட்டு மாட்டு திருநீறு அல்லது பச்சரிசியை குமித்து வைத்து சூலத்தை ஊன்றி வைக்கலாம்.
தினமும் நாம் சாமி கும்பிடும்போது கருங்காலி சூலத்திற்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு மலர்களால் அலங்கரித்து, அம்மனுக்கு உரிய மந்திரங்கள், உரிய பாடல்கள், 108 போற்றி படித்து, தூப தீப ஆர்த்தி காட்டி வணங்கி வழிபட்டால் போதுமானது. அபிஷேகம் தேவை இல்லை, நைவேத்தியம் கட்டாயம் இல்லை. ஒவ்வொரு மாதம் பௌர்ணமி அன்று தாம்பாளத்தில் உள்ள குங்குமம், நாட்டு மாட்டு திருநீறு அல்லது பச்சரிசியை மாற்றி புதிய குங்குமம், திருநீறு அல்லது பச்சரிசியை வைக்கலாம், ஏற்கனவே வைத்திருந்த குங்குமம், திருநீறை பத்திரப்படுத்தி நாம் தினமும் பூசிகொள்ளலாம், பச்சரிசியை சைவ உணவு சமைப்பதற்கு உபயோகிக்கலாம்.
Reviews
There are no reviews yet.